Wednesday, November 09, 2011இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்துள்ளதால், ஐரோப்பிய நாடுகள் இந்த தீரமானத்தை எடுத்துள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் சுவிஸர்லாந்தில் உள்ள ஆயிரம் இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
அதேவேளை சட்டவிரோதமாக தமது நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க நெதர்லாந்து மற்றும் சுவிடன் ஆகிய நாடுகள் அதிகாரபூர்வமான தீர்மானித்துள்ளன. இதனை தவிர அனுமதியின்றி, ஆவணங்கள் எதுமின்றி தமது நாடுகளில் வசித்து வரும் இலங்கையர்களை திருப்பி அனுப்ப மேலும் சில ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
அடுத்த சில மாதங்களில் இந்த நாடுகள் தமது முடிவுகளை உத்தியோபூர்மாக அறிவிக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கிறன.
No comments:
Post a Comment