

Wednesday, November 09, 2011சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாடு இன்று மாலைதீவின் மாலே நகரில் இன்று இடம்பெறுகின்றது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சர் பாட்லீ சம்பிக்க ரணவக்க வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுமக உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது.
இந்த மாநாட்டின் போது வலயத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள், வலய ஸ்திர தன்மை மற்றும் வலயங்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக அமைச்சின் பொது தொடர்பாடல் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
விசேடமாக காலநிலை மாற்றத்தினால் சார்க் வலயத்திலுள்ள நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment