Saturday, November 5, 2011

யுத்த குற்றச்சாட்டு புலிகளின் கொடூரத்தை குறைக்கும்!

Saturday, November 05, 2011
கடந்த வாரத்தில் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடரின் போது, இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தேவையான ஒன்று அல்லவென த அவுஸ்ரேலியன் என்ற பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

யுத்த்தின் இறுதி கட்டத்தில் புலிகள் இருந்த பகுதிகளில் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

இந்த தாக்குதல் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புலிகளின் ஆதரவாளர்களால் குற்றச் சுமத்தப்பட்டது.

கனடா, பிரித்தானியா, போன்ற அரசாங்க பிரதிநிதிகளும் இவர்களுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீது இவ்வாறு பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதன் காரணமாக புலிகள் மேற்கொண்ட குற்றச் சாட்டுகள் மறைக்கப்படும் என்று த அவுஸ்ரேலியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment