Saturday, November 5, 2011

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது:-அனுமதியின்றி மீன்பிடித்த 18 பேர் கைது!

Saturday, November 05, 2011
சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த 06 இலங்கையர்களும் 02 வெளிநாட்டவர்களும் பேருவளை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுமதியின்றி மீன்பிடித்த 18 பேர் கைது!

திருகோணமலையில், நிலாவெளி, புறா தீவிற்கு அண்மையில் அனுமதியின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி, மூதூர் மற்றும் ஏரக்கண்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுமதியின்றி பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் விதிமுறைகளை மீறுதல் மற்றும் சட்டவிரோத வலைகளை பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்களுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் விடயங்கள் தெளிவுபடுத்தப்படவுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் விடத்தல்தீவு பிரதேசத்தில் வெடி குண்டுகள் மீட்பு!

மன்னார் விடத்தல்தீவு பிரதேசத்தில் வனப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தாகை வெடி குண்டினை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 45 அமுக்க வெடிக்குண்டுகள், அதற்கு பயன்படுத்தப்படும் 37 பியூஸ் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து மன்னார் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

1 comment:

  1. The visit was useful. Content was really very informative. visit giftwithlove dot com(Online Florists).

    ReplyDelete