Saturday, November 5, 2011

டெல்லியில் 4 கோடி ஆன மொபைல் போனின் எண்ணிக்கை!

Saturday, November 05, 2011
புதுடெல்லி : நகரில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை 4 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் செல்போன் பயன்பாடு பற்றி அரசு புள்ளியியல் துறை ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் ஷீலா தீட்சித் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: நகரில் மொபைல் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரின் மொத்த மக்கள் தொகை 1.68 கோடி. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி மொபைல் போன்களுக்கு புதிதாக இணைப்பு தரப்பட்டுள்ளது. 2009 - 10 ம் ஆண்டு மொத்தம் 2.82 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இப்போது சுமார் 3.88 கோடி மொபைல் போன்கள் நகர மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

நாட்டிலேயே டெல்லியில் வசிப்பவர்கள்தான் அதிகமாக செல்போன்களை பயன்படுத்துகின்றன்றர் என்பது தெளிவாகிறது. நாட்டில் மொத்தம் 85 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் லேண்ட் போன்களின் பயன்பாடு எப்போதும்போல ஒரே சீராக இருக்கிறது. 2009-10ம் ஆண்டுகளில் நகரில் மொத்தம் 27.10 லட்சம் இணைப்புக்கள் இருந்தன. அது 2010-11 ம் ஆண்டில் 28.38 லட்சமாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் மொத்தம் 5 லட்சம் வாகனங்கள் கடந்த ஆண்டு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து நாட்டின் மொத்த வாகனங்கள் எண்ணிக்கை 69,32,706 ஆக உயர்ந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி டெல்லியில் மட்டும் சுமார் 21,73,323 கார் மற்றும் ஜீப்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment