Sunday, November 06, 2011
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்டதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்; கிழமைக்கு பின்னர் எந்த ஒரு நேரத்திலும் அந்த அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
மனிதாபிமான நடவடிக்கையின் முழுமையான மற்றும் யுத்த கால நிகழ்வுகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த இறுதி அறிக்கை தார் செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலவும் இடம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடையங்கள் இந்த இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படுத்தக் கூடிய சமாதான சூழ்நிலை தொடர்பான யோசனைகளும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் சர்வதேச நாடுகளும் அவதானம் செலுத்த தொடங்கியுள்ளன.
குறிப்பாக இந்த இறுதி அறிக்கையை தாம் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எதிர்பார்க்கும் சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment