Sunday, November 27, 2011

சுன்னாகம் பொலிஸாரினால் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலமாக மீட்பு!

Sunday, November 27, 2011
சுன்னாகம் பொலிஸாரினால் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இளைஞனின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஞயிற்றுக்கிழமை இன்று ஒப்படைக் கப்பட்டுள்ளது.

யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த மனநோயாளியான சுமணன் வயது 32 என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸாரினால் விசாரணைக்காக கிளிநொச்சிக்கு கொண்டு சென்றதாகவும் இதன்போது குறித்த நபர் பொலிஸாரை தள்ளி வீழ்த்திவிட்டு ஓடியதாகவும் துரத்திச் சென்றும் அவரைப்பிடிக்கமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், குளத்தில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment