Sunday, November 27, 2011இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துமாறு அமெரிக்க செனட்டர்கள், அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று அமெரிக்க செனட்டர்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செனட்டர்களான பெட்ரிக் லேஹி, பென்ஜமின் எல் கார்டின் மற்றும் ரொபர்ட் பி கேசி ஆகியோர் இவ்வாறு கோரியுள்ளளனர்.
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கிளின்ரன் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் குற்றச் செயல்கள் n;தாடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரியியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணைகளை நடத்த அமெரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டுமென செனட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மேலும், வடக்கில் இராணுவ மயப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்கு பக்கச் சார்பற்ற வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளனர்.
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதனை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டுமென செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment