முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சரத் பொன்சேகாவின் இரு மகள்மாரினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் we the people வீ த பீபல் என்னும் முறைமையின் கீழ் அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
ஒரு மாத காலத்திற்குள் 25,000 ற்கும் மேற்பட்ட கையொப்பங்கள் திரட்டப்பட்டால் குறித்த மகஜர் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் பதிலளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்த மகஜரில் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment