Sunday, November 27, 2011உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அக்காஷிக்கும் தமிழித் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பானது கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் சந்திப்புக்கான திகதி இன்னும் குறிக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அக்காஷிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நாளை சந்திப்பு நடைபெறவுள்ளது.
அத்துடன் அக்காஷி ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
No comments:
Post a Comment