Sunday, November 27, 2011ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமைப் பொறுப்பு குறித்த யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இதன் போது கட்சித் தலைமைப் பொறுப்பை பெற்றுக் கொள்வதற்காக போட்டியிட உள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைப் பதவிக்காக வேறும் நபர்கள் போட்டியிட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இந்த செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கட்சி செயற்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பொதுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒருவர் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டால் அவர் தற்போது வகித்து வரும் பதவியை துறக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment