Sunday, November 27, 2011இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அக்காசி மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
நேற்று இரவு ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக எமது, விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அவருடன், ஜப்பானின் வெளி விவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் இலங்கை வந்துள்ளார்.
அதேவேளை, இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ள தெற்கு அதிவேக பெருந்தெரு நிகழ்விலும் அவர் பங்குபற்றவுள்ளார்.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் யசூசி அக்காசி நாளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
No comments:
Post a Comment