Sunday, November 27, 2011இலங்கை வரவு செலவு திட்டம் 2012: 100 அம்சங்களை கொண்ட வரவு செலவு திட்ட யோசனைகள்:ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
1. இரு மொழி வேலைத்திட்டங்களை விஸ்தரிப்பதற்காக நடமாடும் இருமொழி பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்படும். அத்துடன் சமூக அமைப்புகள் உருவாக்கப்படும்.
2. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய ஆயுதப்படை வீரர் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் மாதம் 750 ரூபாவை வழங்குதல்.
3. யுத்தத்தில் ஊனமுற்ற படை வீரர்களின் வாழ்வாதாரத்திற்கு படைவீரர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான திட்டத்தின் கீழ் விசேட கடன் வழங்கப்படும்.
4. ஊனமுற்றவர்களுக்கு தற்போது வழங்கும் 3000 ரூபா மாதாந்த கொடுப்பனவுடன் 70 வயதுக்கு கூடியவர்களுக்கு மாதாந்தம் வழங்கும் 300 ரூபாவை 1000 ரூபாவாக அதிகரித்தல்.
5. பல்வேறு காரணங்களினால் அநாதைகளாகியவர்களுக்கு வழங்கிய 100 ரூபாவை 1000 ரூபாவாக அதிகரித்தல்.
6. குடும்ப சுகாதார சேவைக்கு மேலதிகமாக வயோதிப நிலையை அடைபவர்களுக்கு வீட்டுக்கு வந்து உதவும் தாதிமார் சேவை ஆரம்பிக்கப்படும்.
7. முதியோர்களின் சுகாதாரத்திற்கு ஆதார வைத்தியசாலைகளிலும், ஆயுர்வேத வைத்திசாலைகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
8. குறைந்த வருமானமுடையவர்களுக்கு கொடுக்கப்படும் 210 முதல் 615 ரூபா 750ஆக அதிகரிக்கப்படும். குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 900 ரூபா கொடுப்பனவு 1200 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
9. குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் உணவுப் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக போஷாக்குணவுத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.
10. சமுர்த்தி உதவித்திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படும்.
11. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஓய்வூதியம் பெறக்கூடிய வகையில் அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
12. குறைந்த வருமானமுடைய சகல குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவிகளை செய்வதற்காகவும், வாழ்க்கை நிலையை உயர்த்தும் கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இரு மொழி பயிற்சி கொடுக்கப்படும்.
13. வனவிலங்குகளினால் ஏற்படும் உயிரிழப்பு, பொருள் இழப்பிற்கு ஒரு புதிய நஷ்ட ஈட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
14. பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளுக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய வகையில் ஆரம்ப பாடசாலைகள் தம்ம பாடசாலைகளுக்கு முதலிடம் கொடுத்தல்.
15. பின்தங்கிய கிராமங்களில் உள்ள மதவழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வதுடன், அருகிலுள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதில் சம்பந்தப்படும் தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
16. கலைஞர்களின் மரணச் சடங்குகளை நடத்துவதற்காக அந்த குடும்பங்களுக்கு விசேட நிதி உதவி வழங்கப்படும்.
17. கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு உதவக்கூடிய வகையில் 12 லட்சம் ரூபா வாகனங்களை பெறுவதற்காக கடன் வட்டியின்றி கொடுக்கப்படும்.
18. வழக்கு விசாரணைகள் தாமதிப்பதனால் இணக்க சபை நடவடிக்கையை துரிதப்படுத்துவதுடன் நீதி உதவி ஆணைக்குழுவின் கீழ் கிராமிய மட்டத்தில் சட்ட உதவித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
19. நீதி மன்ற அபாரதத் தொகையை செலுத்த முடியாதுள்ளவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்தல்.
20. திறந்த சிறைச்சாலைகளிலும் மற்ற சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளுக்கு விளையாட்டுத்துறையில் பயிற்சியும் ,தொழிற்பயிற்சியும் அளித்தல்.
21. பண்டைய பெருமைக்குரிய கட்டிடங்களை திருத்தியமைத்து அவற்றை நூதன சாலைகளாக மாற்றுவதற்கு நிதி உதவி அளித்தல்.
22. வடமேல் மாகாணத்தின் றுகுணு, மாகம்புறவிலுள்ள பண்டைய ராஜ்ஜியத்திலுள்ள புனித சின்னங்களை பாதுகாத்தல்.
23. மாத்தறை, மாத்தளை, கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பண்டைய இசைக்கருவிகளை மீளமைத்து அக்கருவிகளை பயன்படுத்துவோருக்கு பயிற்சி அளிப்பதற்கான கிராமமொன்றை ஏற்படுத்தல்.
24. சித்திரக்கலைத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக கலை நிலையமொன்று ஏற்படுத்தப்படும். இதற்கென விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்.
25. நிலக்கடலை, பயறு, உழுந்து, எள்ளு, சோளம் ஆகியவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்த உள்ளூர் விவசாயிகளுக்கு ஊக்கமளித்தல்.
26. ஒவ்வொரு மாவட்டமும் ஏதோ ஒரு பயிரில் தன்னிறைவு பெறுவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
27. அரிசியை ஏற்றுமதி செய்யும் நோக்குடன் 4 ஏற்றுமதி வலயங்களை ஏற்படுத்தல்.
28. உத்தரவாதமளிக்கப்பட்ட விதைகள், பயிர்களை இனவிருத்தி செய்யும் அரசாங்க மற்றும் தனியார் துறைக்கு வரிச்சலுகை அளித்தல்.
29. தென்னை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 6 மில்லியன் தென்னம் பிள்ளைகளை பகிர்ந்தளித்தல்.
30. இறக்குமதி செய்யும் தாவர எண்ணெய்க்கு கூடுதலான செஸ் வரி விதிக்கப்படும். தெங்கு உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பு திட்டமொன்றை ஏற்படுத்தல்.
31. கைவிடப்பட்ட இறால் பண்ணைகளில் மீண்டும் இறால் பண்ணைகளை ஆரம்பிப்பதற்கு நிதி உதவி அளித்தல்.
32. வீட்டில் வளர்க்கும் மீன்களை வளர்த்து ஏற்றுமதி செய்வதற்கான சுயவேலைத்திட்டத்திற்கு ஊக்கமளித்தல்.
33. இறைச்சி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நிதி உதவி வழங்குதல். அதற்கு பயன்படுத்தும் இயந்திர உபகரணங்களுக்கு வற் வரி நீக்கப்படும்.
34. பால் உற்பத்தி இயந்திரங்களுக்கான வற் வரி நீக்கப்படும். 3000 பாற்பசுக்களை பகிர்ந்து கொடுத்தல்.
35. வாழ்க்கை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கர் நிலத்தில் பழங்கள், காய்கறிகள் வளர்ப்பதற்கான திட்டம்.
36. சிறிய கால்நடை பண்ணையொன்றை களஞ்சிய வசதிகளுடனான காபனிக் உரத் தயாரிப்பு நிலையத்தை ஏற்படுத்தல்.
37. விவசாயத்திற்கான சிறிய கடன் திட்டம்.
38. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரதேசங்களில் வெள்ளங்களை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம்.
39. உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபைகள் அறவிடும் வரிகளை இலகுபடுத்தி இவற்றின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டம்.
40. கடல்மண் மற்றும் இயற்கையான கடற்கரை தாவரங்களை நாட்டி கடற்கரைகளை பாதுகாக்கும் திட்டம்.
41. உல்லாசப் பிரயாணத்துறை மற்றும் தொழிற்சாலைகளுக்கு கடல் நீரைப் பயன்படுத்தல்.
42. சிறிய அடிப்படையிலான விவசாயிகளுக்கு உதவுவதற்காக சிறிய அடிப்படையிலான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
43. நடுத்தர அளவிலான பாரிய புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை மேற்கொள்ளுதல்.
44. 2012ல் அனைவருக்கும் மின் விநியோகம் அளிக்கும் திட்டத்தின் கீழ் 2600 கிராமங்களுக்கு மின் விநியோகம்.
45. நகரங்களை அடுத்துள்ள மற்றும் வளர்ந்து வரும் நகரங்களுக்கான குடிநீர் திட்டத்தை அமுலாக்குதல்.
46. புதிய பஸ் என்ஜின்களை இறக்குமதி செய்து கிராமப்புறங்களில் 200 பஸ்களை வாங்கி போக்குவரத்து துறையை வலுவடையச் செய்தல்.
47. பொருட்களை ஏற்றிச் செல்வதை ஊக்கமளிப்பதற்காக லொறி, மற்றும் உழவு இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு வற் வரிவிலக்கு அளித்தல்.
48. பஸ், லொறிகளுக்கான டயர்களின் இறக்குமதி வரியை குறைத்தல்.
49. உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிக்கும் வகையில் பஸ்களுக்கு வரிவிலக்களித்தல்.
50. விமான நிலைய சேவைகளை விஸ்தரிப்பதற்காக புதிய வாடகை வாகனங்களுக்கு வரிச்சலுகை அளித்தல்.
51. இலங்கைக்கு வரும் சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 10 டொலரும் ஏனைய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 20 டொலரும் வீசா கட்டணமாக அறவிடப்படும்.
52. இரணைமடு, நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களில் உள்ளூர் விமானநிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
53. கொழும்பு புதுக்கடையில் சர்வதேச பிணக்குகளை தீர்க்கும் நிலையத்தையும் புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியையும் நிர்மாணித்தல்.
54. வலது குறைந்தவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்காக அரசாங்க காரியாலயங்களுக்கு 15ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
55. சகல பாடசாலைகளிலும் புதிய தொழில்நுட்ப கூடங்களை ஆரம்பிக்க நடவடிக்கை
56. தகவல் தொலைத்தொடர்பு சேவை மூலம் ஒரு பில்லியன் டொலரை வருமானமாகக் பெறக்கூடிய வகையில் அம்பாந்தோட்டையில் நவீன நிலையமொன்றை அமைத்தல்.
57. 10 லட்சம் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடமைப்பு. கிராமிய தோட்டப் பிரதேசங்களில் அரசாங்க வங்கிகளின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும்.
58. ஓலை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றும் திட்டம்.
59. ஓடுகள் மற்றும் களிமண் பொருட்களை தயாரிக்கும் கைத்தொழிற்சாலைகளுக்கு வரிவிலக்களித்தல்.
60. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்கள், பலகைகளுக்கு வரிவிலக்களித்தல்.
61. சகல மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள், எம்புலன்ஸ் வண்டிகளை இறக்குமதி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
62. மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு என்பவற்றுக்கு புதிய கட்டிடங்கள் இரண்டு அமைக்கப்படும்.
63. இரண்டாம் நிலை 1000 பாடசாலைகள் அதனுடன் தொடர்புடைய மேலும் 6000 பாடசாமைலகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 2012ம் ஆண்டில் 100 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்.
64. கணிதம், விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் மொழிப் பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்களை சேவையில் சேர்த்துக் கொள்ளல்.
65. வேலையற்றோரின் எண்ணிக்கை 8 சதவீதமாக இருக்கும் மாவட்டங்களில் உல்லாச பிரயாணத்துறை தொழில்நுட்பத்துறை ஆகியவை தொடர்பான தொழில்சார் வகுப்புகளை நடத்துதல்.
66. ஆராய்ச்சியை செய்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு விதிக்கப்படும் வருமான வரியை 16சதவீதமாக குறைத்தல்.
67. துரையப்பா விளையாட்டு மைதானம், கொழும்பு ரீட் மாவத்தையில் மைதானம், அனுராதபுரத்தில் புதிய மைதானம் ஆகியவற்றை மேம்படுத்தி விளையாட்டுத்துறையை விருத்தி செய்தல்.
68. விளையாட்டுத்துறைக்கு தேவையான சீருடை மற்றும் பொருட்களுக்கு வரிவிதிப்பு வழங்கப்படும்.
69. வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களை உருவாக்குதல்.
70. வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்புபவர்களுக்கு வர்த்தக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு புதிய திட்டம்.
71. ஏற்றுமதி வர்த்தகத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், ஏற்றுமதி பொருட்களுக்காக தேசிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்.
72. மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ரூபாவின் மதிப்பை 3 சதவீதமாக குறைத்தல்.
73. அபிவிருத்தி அடைந்துவரும் ஆசிய, ஆபிரிக்க, தென்னாபிரிக்க நாடுகளுடன் புதிய வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தல். மேலும் ஐரோப்பா அமெரிக்காவுடன் புதிய இரு தரப்பு ஒப்பந்தங்கள்.
74. புதிய முதலீடுகளை வரவேற்பதற்காக வர்த்தக தொடர்புகளுக்கு ஏற்புடைய வகையில் வெளிநாட்டு தூதரகங்களை மீளமைத்தல்.
75. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் சாதனங்கள், ஆராய்ச்சிகள், வடிவமைப்புகள் ஆகியவற்றுக்கு தேவையான இயந்திர சாதனங்களுக்கு வரிவிலக்களித்தல்.
76. பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் புதிய பட்டப்படிப்பு பாடநெறியை ஆரம்பித்தல்.
77. இலங்கை உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தினால் பொறியியலாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள், தகவல் தொழில்நுட்பம், தாதியர் மற்றும் சுகாதாரத்துறை சேர்ந்த டிப்ளோமா பாடநெறிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளல்.
78. அரசாங்க காணிகளை 99 வருட குத்தகைக்கு முதலீட்டாளர்களுக்கு வழங்குதல்.
79. விவசாயம் செய்யாத காணிகளை பொறுப்பேற்று 2 ஏக்கர் காணி என்ற அடிப்படையில் 30 வருட குத்தகைக்கு சிறிய தோட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பெற்றுக் கொடுத்தல்.
80. வர்த்தக வங்கிகளுக்கு வெளிநாட்டுக்கடன் உதவி பெறுவதற்கு ஏற்புடைய வகையில் இலகுவான வரி விதிப்பை ஏற்படுத்தல்.
81. சிறிய தேயிலைத் தோட்டங்களை மீண்டும் செய்கை பண்ணுவதற்கான சலுகைகளை அதிகரித்தல்.
82. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலையை அதிகரிப்பதற்காக இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வரிச் சலுகை வழங்குதல்.
83. இறப்பர் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக சிறிய இறப்பர் தோட்டங்களை அபிவிருத்தி செய்தல்.
84. கறுவா, மிளகு, கொக்கோ ஆகிய சிறிய ஏற்றுமதி பொருட்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை.
85. தேசிய துணி தயாரிப்பு தொழிலை ஊக்குவிப்பதற்காக சகல மூலப்பொருட்களுக்கும் வரியில் இருந்து விலக்களித்தல். அவற்றிற்கான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச் சலுகை வழங்குதல்.
86. உள்ளூர் நெசவுக் கைத்தொழிலை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யும் புடவைகளுக்கு கூடுதல் வரி விதிப்பு
87. குடிசை மற்றும் சிறிய தொழில் முயற்சிகள் மூலம் உற்பத்தி செய்யும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குதல்.
88. சேலைன், திரிபோஷ ஆகியவற்றை உள்ளூரில் தயாரிப்பதற்கு விசேட திட்டம்.
89. பசுப்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாற்பண்ணையாளர்களுக்கு கறவை மாடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்.
90. கோழிப்பண்ணை தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கான இயந்திர உபகரணங்களை தருவிக்க வரிச்சலுகை.
91. கடல் ஏரிகளிலும், குளங்களிலும், நீர்த்தேக்கங்களிலும் உள்ள முத்துசிப்பி உட்பட மீன் இனங்களை உற்பத்தி செய்வதற்கு ஊக்கமளித்தல்.
92. வர்த்தக வங்கிகள் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென புதிய வங்கிகளை ஆரம்பித்தல்.
93. சிறிய வியாபாரிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறிய வியாபார முயற்சிகளுக்கு வரிச்சலுகை அளித்தல்.
94. நிதி சட்டத்தை திருத்தியமைப்பதன் மூலம் அரசாங்க நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளை வலுப்படுத்தல்.
95. அரசாங்க ஊழியர்களுக்கு 10 சதவீத சம்பள அதிகரிப்பு
96. நீதிபதிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் , உதவி வைத்தியர்கள், கிராம சேவக உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரித்தல்.
97. பல்கலைக்கழகங்களின் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தரின் சம்பள முரண்பாட்டை தீர்த்துவைத்தல்.
98. வெளியக உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சலுகை அடிப்படையிலான கடன்.
99. ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
100. அஸ்கிரிய விகாரையின் 700 ஆண்டு நிறைவையொட்டி அது தொடர்பான சீரமைப்பு நடவடிக்கையின் பின்னர் பூர்த்தி விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
No comments:
Post a Comment