Sunday, November 27, 2011நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சிப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டா பய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சிகளுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டில் அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளபோதும், நாட்டின் நன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் செயற்படுகின்றனர்.
லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கல்வி நிலையத்தில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க மாநாட்டின் ஆரம்ப நிகழ் வில் கலந்து கொண்ட போது பாது காப்புச் செயலாளர் இதனைக் குறிப் பிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகள் புலிகளுக்கு நிகரான கொள்கைகளையும் கோட்பாடு களையும் பின்பற்றி வருகின்றனர். இவர்களினால் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித அடிப்படையுமின்றி குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கை சுயாதீனமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் வெளிநாடுகளின் ஆலோசனைகள் அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment