Sunday, November 27, 2011

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

Sunday, November 27, 2011
புலிகளின் மாவீரர் நாளையொட்டிய தினங்களில் யாழ் காரைநகர் ஆலயங்களில் மணியொலிக்க இராணுவம் தடை விதித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய காரைநகர் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் வீட்டின் மீது நேற்று பெற்றோல் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காரைநகர் இராணுவத்தினரே இந்த உத்தரவை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆலயங்களின் அர்ச்சகர்களுக்கு இட்டிருப்பதாக காரைநகர் (புலி)கூட்டமைப்பின் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் ஊடகங்களில் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதன் எதிரொலியாகவே யாழ் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டின் மீது இவ்வாறு எச்சரிக்கைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டு உள்ள ஆனைமுகன் தமது வீட்டின் மீதான தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதொன்று என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment