Saturday, November 26, 2011மாவீரர் தினத்தை கொண்டாடும் முகமாகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாகவும் சுவரொட்கடிகள் ஒட்டியிருந்ததினால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாக யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மகிந்தஹத்துருசிங்க தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் படைத்தரப்பு தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்க் கொண்டது. வீதிகளில் இராணுவத்தினர் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
இதனிடையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நுழைந்த காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்ககை துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்திடம் அனுமதி பெற்ற பின்னர் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அண்மைய நாட்களில் படையினரும் காவல்துறையினரும் பல்கலைக்கழகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். கைலாபதி அரங்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது என்ற செய்தி அறியப்பெற்றமையினாலேயே காவல்துறையினர் பல்கலைக் கழகத்திற்குள் உள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
மாவீரர் தினத்தை முன்னிட்டும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒடட்டப்பட்டதை அடுத்து அங்கு மர்ம நபர்கள் உள்நுழைந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட பெயர்ப் பலகையை அடித்து நொருக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்கள் வழமையான நாட்களைப் போன்றதுதான் என படைத்தரப்பு தெரிவித்தது
No comments:
Post a Comment