Saturday, November 26, 2011

மீனவர்களுக்கு ஆதரவாக வாதாடக்கூடாது என்று மிரட்டினார்; டைரக்டர் சீமான் மீது மதுரை வக்கீல் புகார்!

Saturday, November 26, 2011
சென்னை: நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது மதுரை வக்கீல் ஸ்டாலின் பரபரப்பான புகார் மனு ஒன்றை திருவல்லிக்கேணி போலீசில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மதுரை எட்டிமங்கலத்தில் வசித்து வருகிறேன். வழக்கு தொடர்பாக அடிக்கடி சென்னை ஐகோர்ட்டுக்கும் வந்து செல்வேன். சென்னை வரும்போது வாலாஜா ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்குவேன். தற்போது சென்னை வந்த நான் லாட்ஜில் தங்கி இருந்த போது நாம் தமிழர் இயக்க தலைவர் சீமானிடம் இருந்து போன் வந்தது.

முதலில் அவரது பெயரைச் சொல்லி 2 பேர் பேசினார்கள். கடைசியில் சீமான் பேசினார். மீனவர்களுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்ததை கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் தேவையில்லாமல் ஆஜர் ஆகிறீர்கள். மீனவர்கள் பிரச்சினையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தேவையில்லாமல் நீங்கள் வாதாடக்கூடாது. அதோடு மிரட்டல் விடுத்தும் பேசினார்.

இவ்வாறு அந்த புகாரில் ஸ்டாலின் கூறி உள்ளார்.

போலீசார் அந்த புகாரை வாங்கி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.

No comments:

Post a Comment