Saturday, November 26, 2011தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வழங்கிய அறிக்கையின் பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியது!
அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர்.
அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்த அறிக்கையின் ஒரு பிரதியே இப்போது இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பதாக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் தெரிவித்துள்ளது.
அரசைக் கடுமையாக விமர்சித்து, தவறான தகவல்களை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் உள்ளடக்கம்'' அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்திருப்பதாகவும் அந்த அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைதி முயற்சிகளுக்கான பேச்சுகள் ஒருபுறம் நடைபெறும் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகள் பெரும் அதிருப்தி தருவதாக அமைந்துள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி அறிக்கையை அரசின் முக்கியமான உறுப்பினர்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் இது தொடர்பிலான நிலைப்பாட்டை நேரம் வரும்போது அரசு அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தும் என்றும் அரசின் மிக முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment