Monday, November 28, 2011

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கமைய இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை!

Monday, November 28, 2011
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொருட்டு கிழக்கு மாகாண சபையின் வேண்டுகோளுக்கமைய இந்தியாவிலுள்ள சேவா நிறுவனம் மேற்கொண்டுவரும் சுயதொழில் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு இரண்டாம் கட்டமான பயிற்சி நெறிக்காக பயணாளிகளை தெரிவு செய்யும் நேர்முகப்பரீட்சை 26.11.2011 காத்தான்குடி பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கமைய இதன் இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை நடைபெற்றது. இந்த நேர்முகப்பரீட்சையை இந்தியா சேவா அமைப்பின் உத்தியோகத்தர்களான திருமதி பயால், திருமதி லீனா நடாத்தினர். இந்த நேர்முப்பரீட்சையில் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதியைச்சேர்ந்த பெண்கள் தோற்றினர்.

இந்தியாவின் சேவா அமைப்பினால் இந்தியா குஜராத்தில் சுயதொழில் பயிற்சிகளை 40 பெண்களுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் முதலாம் கட்டமாக 22பெண்கள் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 11பெண்கள் பயிற்சியை முடித்து நாடு திரும்பியுள்ளனர். இன்னும் 11 பெண்கள் தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்டமாக மேலும் 18 பெண்கள் டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் இந்தியாவுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் என்.மணிவண்னன் தெரிவித்தார்.

பயிற்சியை முடித்து வரும் இவர்களைக்கொண்டு கிழக்கு மாகாணத்திலள்ள 800 பெண்களுக்கு வாழ்வாதார சுயதொழில் பயிற்சிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment