Monday, November 28, 2011

மதுரையில் இந்தியப் பிரஜைகள் என பொய் கூறி கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா மூவாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது!

Monday, November 28, 2011
மதுரை: இந்தியப் பிரஜைகள் என பொய் கூறிய இலங்கையர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரஜைகள் என பொய் கூறி சொத்து ஒன்றை கொள்வனவு செய்த இலங்கையர்களே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை காமராஜர் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக கடமையாற்றிய இலங்கையர் ஒருவரும் அவரது பெற்றோரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. குறித்த இலங்கையர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா மூவாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அகதிகளாக இந்தியாவிற்குள் பிரவேசித்த இவர்கள், பின்னர் சட்டவிரோதமான முறையில் இந்தியப் பிரஜைகளாக மாறியுள்ளனர்.

அரசாங்கத்தை ஏமாற்றி ஆவணங்கள் தயாரித்து மோசாடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜேகொப் சவரிமுத்து, மேரி எக்னஸ் மற்றம் ரொஹான் சவரிமுத்து ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment