Friday, November 04, 2011
அண்ணாநகர்: பேரறிவாளன் உள்பட மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்-(புலிகளின் புதிய நிர்வாக குழு) நல்லகண்ணு வலியுறுத்தினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு அமைப்பினர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 44-வது நாளான இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில தலைவர் சுசீலா, வடசென்னை மாவட்ட செயலாளர் சம்பத், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில் நல்லகண்ணு பேசியதாவது: சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தண்டனை நிர்ணயமாகி 11 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
ஒவ்வொரு நாளும் எப்போது தூக்கிலிடுவார்கள் என்ற மனவேதனையுடன் அவர்கள் மூவரும் செத்துத்செத்து பிழைக்கின்றனர். அதுவே அவர்களுக்கு பெரிய தண்டனை. அவர்களை விடுதலை செய்ய மக்கள் அனைவரும் போராட முன்வர வேண்டும். 132 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.
மூன்று பேருக்கு தூக்கு என்பது தமிழர்கள் அனைவருக்கும் வேதனை தரும் விஷயம். அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக் கூடாது. எதிர் காலத்தில் மரண தண்டனையே இருக்கக் கூடாது.

No comments:
Post a Comment