Friday, November 04, 2011
எந்நேரத்திலும் ஈரான் யுத்தத்துக்கு தயாராகவுள்ளதாகவும், இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சாலி தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டு ஊடகமொன்றுக்கே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இஸ்ரேலிடம் இருந்து கடந்த 8 வருட காலத்துக்கும் மேலாக எமக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. எமது நாடு ஒற்றுமையானது. எமக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் புதியதல்ல. எந்தவொரு நாடும் எம்மைத் தாக்க முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும், நாம் எதற்கும் பின் நிற்கப்போவதில்லையென்பதுடன் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள எம்மால் முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் மேற்படி கருத்தானது உலக அரசியல் அரங்கில் பாரிய எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது.
இதேவேளை ஈரானைத் தாக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் மிகவேகமாக முன்னெடுத்து வருவதாக அண்மையில் செய்தி வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment