Friday, November 4, 2011

தண்ணி அடிப்பீங்களா?’’ ‘‘சேச்சே.. பீர் மட்டும்’’இது கொயந்தைங்கோ விசுக்கி’!

Friday, November 04, 2011
தண்ணி அடிப்பீங்களா?’’ ‘‘சேச்சே.. பீர் மட்டும்’’ பீர் ‘தண்ணி வகையறா’ இல்லை என்பது இவர்களது கருத்து. காரணம், மது வகைகளிலேயே கம்மியாக ஆல்கஹால் இருப்பது பீரில்தான். 4 முதல் 6% ஆல்கஹால் மட்டுமே இதில் உள்ளது. ஒயின் 9-16%, வோட்கா 40%, பிராந்தி 35-60%, ரம் 37-80% என்று சரக்குக்கு சரக்கு ஆல்கஹால் சதவீதம் வேறுபடுகிறது. கொஞ்சம்கூட ஆல்கஹால் இல்லாமல் விஸ்கி தயாரித்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ஸ்காட்டிஷ் ஸ்பிரிட்ஸ் நிறுவனம்.

ஆர்கே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி அறிமுகமாக உள்ளது. மதுவை விட்டுவிடும் ஐடியாவில் இருப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இது ஏற்றது என்று அமெரிக்கா, இங்கிலாந்தில் விளம்பரங்கள் தூள் பறக்கின்றன. இங்கிலாந்தில் பாட்டில் விலை ரூ.780, டின் ரூ.310 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment