Friday, November 04, 2011
பாதாள கோஷ்டியனரை பயன்படுத்தி பிரமுகர் ஒருவரை கொலை செய்ததோடு, பிரமுகர் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பபிரயோகத்தினால் ஒருவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
உலகில் வேறு எங்கே இவ்வாறு நடைபெறுகின்றது என இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் இத்தகைய நபர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக HIGHCOPE சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இராணுவ நீதிமன்றத்தில் பிரிகேடியர் ஆர்.டி.உடவத்த அளித்த சாட்சியத்தின் 25 பகுதிகளை சரத் பொன்சேக்காவின் சட்டத்தரணி சாலிய பிரீஸ் மேல் நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.
HIGHCOPE சம்பவம் தொடர்பில் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சாட்சியங்களும் மேல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சாட்சியங்களும் சமமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டத்தரணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த வழக்கு மீதான மேலதிக விசாரணை இம்மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment