Friday, November 04, 2011
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே வந்துள்ளனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனைக்கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை இன்று (4.11.2011) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்துரையாற்றிய போது’
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் எனபதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமெரிக்க விஜயத்தின் போது கூட்டமைப்பைச்சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளாமையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கேயே உள்ளனர், இவர்களில் ஒருவரையாவது அழைத்துச்சென்றிருக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலம் பேசத்தெரியாதா? பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அண்ணன் தாரளமாக ஆங்கிலம் பேசுவார். அவரையாவது அழைத்தச் சென்றிருக்கலாம்.
ஆனால் கிழக்கு என்ற ஒருகாரணத்திற்காக மட்டக்களப்பை இவர்கள் புறக்கணித்துள்ளனர்.
கிழக்கை இவர்கள் புறக்கணிப்பது இன்று மட்டுமல்ல தொடர்ந்து செய்துவரும் நடவடிக்கையாகும். இராஜதுரையை புறக்கணித்தார்கள், புலிகள் நான் கிழக்கு என்பதற்காக என்னை புறக்கணித்தார்கள்.
இவ்வாறு கால காலம் இவர்களின் கிழக்கு புறக்கணிப்பு இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றது.
கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு இவர்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இன்று இலங்கையின் மிகப்பெரிய இரண்டாவது குடி நீர் விநியோகத்திட்டம் ஜனாதிபதியினால் அண்மையில் வவுனதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் நான் புலிகள் இயக்கத்திலிருக்கும் போது இந்த உன்னிச்சை குடி நீர் திட்டத்திற்கு அதிகாரிகள் என்னிடம் அனுமதி கேட்டபோது அந்த அனுமதியினை எழுத்தில் எழுதி கொடுத்ததுடன், புலிகளின் கட்டுப்பாட்டில் அப்போது உன்னிச்சை பிரதேசம் இருந்தபோது அதிகாரிகளை அழைத்துச்சென்று அத்திட்டத்தை பார்வையிட்டேன்’ எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment