Monday, November 21, 2011கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெறும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டும். பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்ரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தொவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது உண்மையில் சிறந்த விடயமாகும். ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதன் மூலம் அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட முடியும்.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரின்போது பல நாடுகள் தாங்கள் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறியிருந்தன.
அந்த வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் முக்கியமானதாகும். அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதை சர்வதேசத்துக்கு வெளிக்காட்டவேண்டும்.அதாவது நாட்டில் மீண்டும் ஒருமுறை இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மீண்டும் புலிகள் போன்ற அமைப்பு உருவாகாமல் இருக்கவேண்டும். இதற்கு ஏதுவாக ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமைந்திருக்கும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எந்தளவு அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்பதனை சர்வதேசத்துக்கு காட்டவேண்டியுள்ளது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment