Monday, November 21, 2011

ஜே.வி.பி. கிர்ச்சிக்குழு விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது!

Monday, November 21, 2011
ஜே.வி.பி. கிர்ச்சிக்குழு விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் மாதமளவில் புதிய இடதுசாரி கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளர்ச்சி குழுவைச் சேர்ந்தவர்கள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் மாதம் ஜே.வி.பியை விட்டு பிளவடைந்து செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகக் கட்டமைப்பை தீர்மானிக்கும் நோக்கில் பொதுச்சபைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் கட்சிக்கு பெயர் ஒன்றை இன்னமும் நிர்ணயிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment