Monday, November 21, 2011

மனோ கணேசனுக்கு, ஐ.தே.க. இடம் கிடைக்காது – ஜோன் அமரதுங்க!

Monday, November 21, 2011
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனுக்கு தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பானர் ஜோன் அமரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனோ கணேஷனை தேசிய பட்டயல் நாடாளுமன்ற உறுப்பினராக தமது கட்சிக்கு உள்வாக்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தற்போது கட்சியின் தேசிய பட்டடியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள டி எம் சுவாமிநாதன் மற்றும் ஆர் யோகராஜன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எந்த கோரிக்கையும் எழவில்லை என்பதனையும் கட்சியின் அமைப்பானர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment