Saturday, November 19, 2011வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அளிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களால் சிறைச்சாலை வான் வண்டி மற்றும் சிறைச்சாலை வாகனம் ஆகியன மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை வண்டியொன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவை சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் குறித்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment