Saturday, November 19, 2011சென்னை: தண்டையார்பேட்டை : மூலகொத்தளத்தில் உள்ள விடுதி மாடியில் நிறுவப்பட்டிருந்த செல்போன் டவர் இன்று காலை தீப்பிடித்து வெடித்து சிதறியது. பீதியில் மக்கள் ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மூலகொத்தளம் பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இதன் மொட்டை மாடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 செல்போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. டவர் அருகே உள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று காலை 10 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. உள்ளே இருந்த கட்டுப்பாட்டு கருவி, மின்சாதனங்கள் வெடித்து சிதறியதால் பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் டவரிலும் தீப்பற்றியது. அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். ரோட்டில் வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பேசின்பிரிட்ஜ் உள்பட பல இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கட்டுப்பாட்டு அறையில் தீப்பிடித்தது எப்படி என்று விசாரணை நடத்துகின்றனர்.
No comments:
Post a Comment