Saturday, November 19, 2011

சவூதியில் நிர்க்கதிக்குள்ளான 20 பேர் நாடு திரும்பினர்:-பஹ்ரெய்னில் இருந்து நாடு திரும்பிய பெண்னின் உடலில் ஆணி!

Saturday, November 19, 2011
சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருந்த 20 இலங்கைப் பணியாளர்கள் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை திரும்பியுள்ள பணியாளர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு வேலைலாய்ப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமானநிலைய அலுவலக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பளம் வழங்கப்படாமை, எஜமானார்களின் துன்புறுத்தல்கள் மற்றும் விசா காலாவதியானமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த பணியாளர்கள் சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கிறது.

பஹ்ரெய்னில் இருந்து நாடு திரும்பிய பெண்னின் உடலில் ஆணி!

இரும்பு ஆணிகள் உடலினுள் செலுத்தப்பட்ட நிலையில் பெண்ணொருவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணுக்கான சிகிச்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷவேந்ர கமகே கூறினார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் வினவியபோது தொழில் வாய்ப்பிற்காக பஹ்ரேய்ன் சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள பெண் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment