Saturday, November 26, 2011

சாய்ந்தமருது கடலில் இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார்!

Saturday, November 26, 2011
சாய்ந்தமருது கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை பத்து மணியளவில் சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதிக்கு முன்னாள் உள்ள கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது

சாய்ந்தமருது முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.எம்.சிபான் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருடன் கடலில் நீராடிய மேலும் சில இளைஞர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் சுமார் இரு மணித்தியாலங்களின் பின்னர் அதே இடத்தில் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment