Saturday, November 26, 2011

அநுராதபுரம் குடாநெலும பகுதியில் பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம்!

Saturday, November 26, 2011
பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவமொன்று அநுராதபுரம் குடாநெலும பகுதியில் பதிவாகியுள்ளது

தரம் ஐந்தில் கல்வி கற்கின்ற ஒன்பது வயது சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பாடசாலையில் இருந்து நேற்று பிற்பகல் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மறைந்திருந்த இனந்தெரியாத ஒருவரே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment