Saturday, November 26, 2011நாட்டின் தென் கரையோரப் பிரதேசங்களில் வீசிய கடும் காற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
மழையுடன் கூடிய கடும் காற்றினால் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி மாவட்ட நிவாரண நடவடிக்கைகளுக்காக இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மேலதிக மாவட்ட செயலாளர் எம்.கே.பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
இதேவேளை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மாத்தறை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களைத் தேடி கடற்படையின் இரண்டு படகுகள் தென்பகுதி கடலில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்கரையில் இந்த படகுகள் தேடுதலை மேற்கொண்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறினார்.
கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் 12 மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக நிலவுகின்ற அதிக மழையுடனான சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் பல வீதிகள் வெள்ளநீர் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment