Saturday, November 26, 2011யாழ்-தீவுப்பகுதியான அனலதீவில் வீட்டிலிருந்து மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இராணுவத்தினரோடு இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த நபரின் வீட்டிலிருந்து இரண்டு கிரனேட்கள், துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே கடத்தல் ஒன்றுடன் தொடர்புபட்டவர் எனவும் அண்மையில் தான் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும் மேலும் தெரியவருகிறது.
இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment