Wednesday, November 2, 2011

தாய்லாந்து அரச குடும்பத்தினர் அலரிமாளிகைக்கு விஜயம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மன்னர் வாழ்த்து செய்தி!

Wednesday, November 02, 2011
ஸ்ரீ தலதா மாளிகையைத் தரிசிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து அரச குடும்பத்தினர் நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் 18ம் திகதி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையொட்டி ¡ய்லாந்து மன்னரின் வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர்கள் தாய்லாந்தின் மத பொக்கிஷங்களான புத்தபெருமானின் புனித கேசம், மற்றும் பெளத்த மத சின்னங்களையும் ஜனாதிபதிக்கு பரிசளித்தனர்.

84 வயதான தாய்லாந்து மன்னருக்கு ஆசீர் வேண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இந்த அரச குடும்பத்தினர் இலங்கை வந்துள்ளனர்.

இவர்களுடன் தாய்லாந்தின் பெளத்த துறவியர் இருவரும் இலங்கை வந்துள்ளதுடன் அவர்கள் ஜனாதிபதிக்கு தமது ஆசிகளை வழங்கினர். இந்த அரச குடும்ப தூதுக்குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஞாபகார்த்த சின்னமொன்றையும் புத்தர் சிலைகளையும் வழங்கினார்.

நேற்றைய இச்சந்திப்பில் லண்டன் விஹாராதிபதி பொஹோட சீலம்வல தேரர், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment