Thursday, November 03, 2011குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அல்லது பொலிஸ் திணைக்களத்தின் ஏனைய சிவில் விசாரணைப் பிரிவுகளில் இருந்து வருவதாகக் கூறி வீடுகளில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுகின்றமை குறித்த தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர்.
இவ்வாறு வீடுகளுக்கு வருகின்றவர்களின் அடையாள அட்டைகளை மக்கள் பரிசோதிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து சந்தேகம் நிலவுமாயின் அவசர அழைப்பு இலக்கமான 119 க்கு அறிவிக்குமாறும் பொலிஸார் மக்களிடம் கேட்டுள்ளனர்.
வீடொன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
மதவாச்சி பிரதேச வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்த வயோதிபப் பெண்ணின் சடலத்தைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
அந்த வீட்டில் வசித்துவந்த 78 வயதான வயோதிபப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
கடந்த 27ஆம் திகதி காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் புதுக்குடியிருப்பு பகுதி கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
வவுனியாவைச் சேர்ந்த இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.
அவர் இரும்புப் பொருட்களை சேகரிப்பதற்காக புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொல்லுகளால் தாக்கி ஒருவர் கொலை!
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் கூரான ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தை அடுத்து தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாமடல பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே தாக்கிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
No comments:
Post a Comment