Thursday, November 3, 2011

வத்தளை, கெரவலபிடியவில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயம்!

Thursday, November 03, 2011
வத்தளை, கெரவலபிடியவில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறிப்பிட்ட இளைஞர் வீட்டில் இருந்த வேளையில், பஜீரோவில் வந்த இனம்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இளைஞன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்

No comments:

Post a Comment