Tuesday, November 15, 2011
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவை புலிகள் கொலை செய்யவில்லை. சிங்கள பேரின வாதிகளே ரகுவை கொலை செய்தனர் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திர காந்தன் தெரிவித்தார்.
நேற்று (14.11.2011) காலை ஆரையம்பதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதுலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ரகு என அழைக்கப்படும் நந்தகோபனின் மூன்றாவது ஆண்டு நினைவு தினக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ரகு சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
புலிகள் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ரகுவை புலிகள் கொலை செய்ய சந்தர்ப்பம் இல்லை. மாறாக சிங்கள பேரினவாதமே ரகுவை கொலை செய்தது.
கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர் ரகுவாகும்.
இதை பொறுக்க முடியாத சக்திகள் கருணாவின் கதையைக்கேட்டு செய்யப்பட்ட சதியே ரகுவின் கொலையாகும்.
நாங்கள் முதலமைச்சராக வேண்டுமென்றோ, அல்லது மாகாண சபை உறுப்பினர்களாக வேண்டுமென்றோ அரசியலுக்கு வரவில்லை.
யாழ் மேட்டுக்குடியிருப்பாளர்களுக்குப் பின்னால் சென்று எமது கிழக்கு மாகாணத்தை சீரழிக்க விரும்பவில்லை.
நாங்கள் அடித்து விரப்பட்டாலும் அல்லது சுடப்பட்டாலும் ரகுவின் கொள்கையை ஒரு போதும் விடமாட்டோம்.
இன்று கிழக்கு மாகாணத்தில் சீரழிந்து போயுள்ள பின் தங்கிய கிராமங்களின் கல்வியை மேம்படையச் செய்துள்ளோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவது சரியானதும் சாத்தியமானதும் என்றிருந்தால் நாங்கள் அவர்களுக்குப்பின்னாள் சென்றிருப்போம்.
அவர்கள் கூறுவது சாத்தியமற்றது. சாதிக்க முடியாதவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர், அதனால் தான் நாங்கள் கிழக்கு மாகாணத்தை கையிலெடுத்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசும் உணர்ச்சிப் பேச்சுத்தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
காசியானந்தன் இந்தியாவிலிருந்து கொண்டு வீர வேசம் பேசியுள்ளார். காசியானந்தனும் அவரது குடும்பமும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர். அவரது பிள்ளைகள் இந்தியாவிலேயே கல்வி கற்கின்றனர்.
இவரின் விர பேச்சு குழப்பதையே ஏற்படுத்தும், மாறாக எந்த தீர்வையும் கொண்டுவராது. மேட்டுக்குடியினர் நமது தலைகளில் கொச்சிக்காய் அரைக்க இடம் வைக்க கூடாது.
மீண்டும் தமிழ் மக்களை அழிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இடமளிக்காது. சிங்கள பேரினவாதிகளுடன் போராடியாவது எமது மக்களுக்கு நாம் சரியாக வழிகாட்டுவோம்.
கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழுகின்ற ஒரு மாகாணமாகும். இதை இன நல்லுறவுடன் கட்டியெழுப்ப வேண்டும்.
ரகுவின் கொலை நன்கு திட்மிட்டு இடம் பெற்றதாகும். ரகுவின் நோக்கம் புனிதமானது. கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கொள்கையை நிலை நாட்டி அதை வெற்றி கொள்ளச் செய்தவர். நோர்வேயில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் மறைமுகமாக செயற்பட்டவர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை கிழக்கு மாகாணத்துக்கென உருவாக்கி கட்சியை பதிவு செய்தார்.
எனவே அவரின் கொள்கையை வெற்றியடைச் செய்வதே அவருக்கு நாம் செலுத்துகின்ற அஞ்சலியாகும் என இதன் போது முதலமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment