Tuesday, November 15, 2011

மனித உரிமைகளை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது!

Tuesday, November 15, 2011
மனித உரிமைகளை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் காலியில் நடைபெற்று வரும் சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க பிரதிப் பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் செச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சகல பிரஜைகளினதும் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது என்பதனையே அமெரிக்கா வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு கடல் பாதுகாப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நிரந்தர தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் யதார்த்தமான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment