Tuesday, November 15, 2011

உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா-விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது!

Tuesday, November 15, 2011
உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல், மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரை மேற்குலக நாடுகள் ஒதுக்கி தனிமைப்படுத்தியுள்ளதனைப் போன்று இலங்கை தனிமைப்படுத்தப்படுவதனை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி இந்த குறிப்பு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலம் புலிகளுடன் பிரிவினைவாத யுத்தம் நடைபெற்றதாகவும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தொலைநோக்குத் திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குரியே என அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment