Tuesday, November 15, 2011

பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நாடுகளின் ஒன்றிணைந்த முயற்சி சட்டவிரோத செயற்பாட்டை தடுக்கும்-கோத்தாபய ராஜபக்ஷ!

Tuesday, November 15, 2011
கடற்படைகளைக் கொண்ட சக்தி வாய்ந்த நாடுகள் தங்களுக்கு கிடைத்திருக்கும் இரகசிய தகவல்களை மற்ற நாடுகளுக்கும் பரிமாறி ஒரு கூட்டு முயற்சியாக ஆழ்கடலில் ரோந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதன் மூலமே கடற்கொள்ளைக்காரர்களினதும், பயங்கரவாதிகளினதும் சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிக்க முடியும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனவே, நல்ல முறையில் திட்டமிட்டு உயர்மட்டத்தில் இதற்கான தக்க நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே இந்த கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடல் பிரயாணத்தை மேற்கொண்டு வரும் கப்பல்களுக்கும் கடற்கரையை எல்லைகளாக கொண்டுள்ள நாடுகளும் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியி ருப்பதனால் அவற்றிற்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அனைத்து தரப்பினரும் தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியமென்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் கோல் டயலொக் 2011 என்ற உயர் மட்ட இரண்டு நாள் சர்வதேச மாநாடு நேற்று காலியில் ஆரம்பமானது. இதில் ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

‘இந்து சமுத்திர கடற்பிராந்திய நடவடிக்கைகள் தொடர்பான சவால்கள், மற்றும் தந்திரோபாய கூட்டுறவு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மகாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்து சமுத்திர கடல் மார்க்கமாக ஒரு வருடத்திற்கு சுமார் 60 ஆயிரம் கப்பல்கள் பயணிக்கின்றன. இது உலகத்தின் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் சுமார் 50 வீதமாக இருக் கிறதென்றும் எனவே, இந்த கடற்பாதைக்கு பாதுகாப்பை வழங்குவது அவசியமென்றும் அவர் தெரிவித்தார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடற் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு ஒரு பெரும் பங்கை இலங்கை வழங்க முடியுமென்று தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் இதனால் இப்பிராந்தியத்தில் உள்ளநாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளும் நன்மையடைய முடியுமென்றும் தெரிவித்தார்.

தற்போது சில நாடுகள் தங்கள் தேசிய பாதுகாப்பு படை வீரர்களை இந்த வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பு செயற் பாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறதென்றும், இந்தக் கப்பல்களும் இப்போது தங்களுக்கு இலங்கை பாதுகாப்பை வழங்க வேண்டு மென்று கேட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரிஈயை யுத்த முனையில் படுதோல்வியடையச் செய்த அனுபம் இலங்கைக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், இப்போது எல்.ரி.ரி.ஈ. இயக்கம் ஆழ் கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறதென்று கூறினார்.

அன்று யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் எல். ரி. ரி. ஈ. பாரிய யுத்த ஆயுதங்களையும் நவீன ஆயுதங்களை யும் சிறிய விமானங்களையும் கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்திருக்கிறதென்று கூறினார். எல். ரி. ரி. ஈ பயன்படுத்திய எந்தவொரு ஆயுதமும் இலங்கையில் தயாரிக்கப்பட வில்லை என்று சுட்டிக்காட்டிய கோத்தபய ராஜபக்ஷ, எல். ரி. ரி. ஈயின் கையாட்களாக செயற்பட்ட பலதரப்பட்ட அமைப்புகள் இந்த ஆயுதங்களை பகுதி பகுதியாக சட்டவிரோதமாக தயாரித்து அவற்றை கடல் மார்க்கமாக இரகசியமாக இலங் கைக்குள் கடத்தி வந்திருக்கிறது என்று கூறினார்.

காலி, லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சர்வதேச சமுத்திர பாதுகாப்பு மகாநாட்டினை இலங்கை கடற்படையினர் ஒழுங்கு செய்திருந்தனர். எல். ரி. ரி. ஈ. இயக்கம் இந்த பாரிய யுத்த ஆயுதங்களை 20இற்கும் மேற்பட்ட பெரிய கப்பல்களிலும் பெருமளவிலான பாரிய இழுவைக் கப்பல்கள் மூலமும் வேறு நாடுகளின் தேசியக் கொடிகளை பறக்கவிட்டுக்கொண்டு இந்த ஆயுதங்களை கடத்தி வந்ததாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

2006 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்கள் 5 சந்தர்ப்பங்களில் ஆழ்கடலுக்கு ஊடுருவிச் சென்று எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் 8 பெரிய கப்பல்களை தாக்கி கடலில் மூழ்கடித்தனர் என்று கூறினார்.

கடல் எல்லைகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்துமே இன்று கடல் மார்க்கமாக வரும் பயங்கரவாதிகளின் பேராபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன என்றும், எமது நாட்டின் கடல் எல்லைகளில் உள்ள பலவீனமான இடங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அவற்றை தங்களுக்கு சாதகமாக

சோமாலிய கடற்கொள்ளை காரர்கள் பற்றி பிரஸ்தாபித்து பேசிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, சோமாலிய கடற் கொள்ளையர்களை அடக்குவதற்கு தற்போதுள்ள சர்வதேச கடற் சட்டங்களும், பாதுகாப்பு நடவடிக்கை களும் பயனற்றவையாகியுள்ளன என்று வருத்தம் தெரிவித்தார்.

சம்பிரதாயபூர்வமாக பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வதில்லை. இந்தக் கப்பல்கள் தங்களை இந்த ஆழ் கடல்களில் அதிகரித்துவரும் கடற்கொள்ளை யர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் பலவீனமாக அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர் அமெரிக்கா போன்ற சில நாடுகள் தங்கள் கடல் சட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கொள் கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்திருக்கிறதென்றும் கூறினார்.

No comments:

Post a Comment