Wednesday, November 9, 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் - ஜே.வி.பி. கிளர்ச்சிகுழு!

Wednesday, November 09, 2011
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தங்களால் தீர்வு வழங்க முடியும் என ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைகள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளன அல்லது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படாத நிலை நீடிக்கப்பட்டு வருகின்றது என கிளர்ச்சிக்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி வீரர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரி அமைப்புக்களின் குறைபாடுகளே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாண மக்களுடன் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் இடதுசாரி கோட்பாடுகளின் மூலம் தீர்வு வழங்கப்பட முடியும் எனவும் வடக்கு கிழக்கு மக்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி அமைப்புக்களில் இணைந்து உரிமைகளை பெற்றுக் கொள்வதனை தவிர தமிழர்களுக்கு வேறு வழி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. போன்ற கட்சிகளினால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment