Wednesday, November 9, 2011

இலங்கையில் சில இணைய தளங்கள் முடக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Wednesday, November 09, 2011
இலங்கையில் சில இணைய தளங்கள் முடக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை அலுவலகம் ஊடக அறிக்கையின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. எந்தவொரு ஜனநாயகக் கட்டமைப்பிலும் கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முதன்மையான காரணிகளில் ஒன்று என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஊடகங்களினால் வெளியிடப்படும் சகல தரவுகளை பார்வையிடுவதற்கான உரிமை மக்களுக்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களை சுயாதீனமாக வெளியிடும் திறமை அனைவருக்கும் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென தெரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment