Wednesday, November 9, 2011

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டிய அத்தியாவசியமானது-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, November 09, 2011
தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டிய அத்தியாவசியமானது-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

மூன்று தசாப்த கால யுத்தமொன்றில் பின்னர் துரித தீர்வுகளை ஏட்டுவது இலகுவான விடயம் அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..

அதன்பொருட்டு தற்காலிக வழிமுறைகளால் நன்மை ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளியில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் பிரதிநிதிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்காக தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தீர்வுகள் தொடர்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டிய அத்தியாவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சில சமய பெரியார்களும் குறித்த நிகழ்வில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில், 17 வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இன்று மாலைதீவு நோக்கி பயணமாகி சென்றுள்ளார்.

No comments:

Post a Comment