Wednesday, November 09, 2011மொட்டைக்கடிதம் எழுதுபவர்கள் கோழைகள் என்று ஒரு பேரறிஞர் விளக்கமளித்துள்ளார். நேருக்கு நேர் வந்து ஒருவருடைய தவறுகளை எடுத்துக்காட்டி, பேசுவதற்கு தைரியமற்றவர்களே மொட்டைக் கடிதங்களை எழுதுவார்கள். மொட்டைக் கடிதத்தை எழுதுபவர்கள் அதனால் பாதிக்கப்படும் ஒருவர் அநாவசியமாக பலரை சந்தேகிப்பார்.
இப்படியான விசமத்தனங்களை செய்யும் இந்த மொட்டைக்கடித கலா சாரம் இப்போது இணையத்தளங்களுக்கும் தொற்றியிருக்கிறது. இவ் விதம் பல இணையத்தளங்கள் மற்றவர்களை சமூகத்தில் அவமா னச் சின்னங்களாக இழிவுபடுத்துவதற்காக கீழ்த்தரமான, பொய் யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த இணையத் தளங்களுக்கு வெறுமனே ஒரு பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் அவை போலியான இணையத்தள முகவரியுடன் செயற்படுவதனால் அவை எங்கிருந்து இந்த பொய்யான தகவல்களை வெளியிடு கின்றன என்பதை கண்டுபிடிப்பதற்கு முடியாதிருக்கிறது.
இத்த கைய இணையத்தளங்களில் வரும் சில தகவல்கள் ஒரு தனிநப ருடைய இரகசியத் தன்மையை சீர்குலைக்கக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக ஊடக, தகவல் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல விடுத்துள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், பொருளாதார விற்பன்னர்கள், வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் உட்பட சாதாரண மனிதர்களைக்கூட இலக்குவைத்து இந்த இணை யத்தளங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன.
இந்த இணையத்தளங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதற்கும் எவ்வித வசதியும் இல்லை. இத னால் வெகுஜன, ஊடகத் துறை அமைச்சு இத்தகைய இணையத் தளங்கள் அனைத்தையும் இலங்கையில் திறக்க முடியாத வகை யில் தடை செய்துள்ளது.
இந்த இணையத்தளங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர், ஆசிரியர்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர் கள் பத்திரிகா தர்மத்தை உதாசீனம் செய்து இவ்விதம் தனிப்பட்ட வர்களின் இரகசியத்தன்மைக்கு எதிராகவும் அவர்களின் பாது காப்புக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சின் இந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இத்தகைய விடயங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட வெகு ஜன ஊடக, தகவல்துறை அமைச்சு சகல இணையத்தளங்களும் ஊடகவியலாளர் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்பு களுக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் ஏற்புடைய வகையில் தகவல்களை உள்ளூரில் அல்லது வெளிநாடுகளில் இருந்து இணையத் தளங்களில் செய்திகளை வெளியிட வேண்டுமென அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்விதம் ஊடக தர்மத்திற்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள் ளும் சகல இணையத்தளங்களும் வெகுஜன ஊடக, தகவல்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டு தங்களை உத்தியோகபூர்வமான முறையில் அமைச்சில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல கேட்டுக் கொண்டார்.
இதே வேளையில் இது போன்று பொய்யான தகவல்களை வெளி யிட்டு தனிப்பட்டவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய போலி இணையத்தளங்கள் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில் செயற்பட்டு வருகின்றன. பெங்கோக்கில் மாத்திரம் இது போன்று செயற்பட்ட 48ஆயிரம் போலி இணையத்தளங்களை அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டில் தடை செய்தது. தாய்லாந்தின் அரசியல் நெருக் கடி குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்த மேலும் 2 ஆயிரம் இணையத்தளங்களும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய இணையத்தளங்கள் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய நிர்வாணப் படங்களையும் இத்துடன் சேர்த்து வெளியிடுவதனால் தாய்லாந்து அரசாங்கம் இந்த கடுமையான விதிமுறையை நடை முறைப்படுத்தியுள்ளது.
இதே வேளையில் அமெரிக்க அரசாங்கமும் இத்தகைய இணையத் தளங்களில் தனிப்பட்டவர்களை இழிவுபடுத்தும் செய்திகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சட்டப்படி இணையத்தள செய்திகளை தணிக்கை செய்ய முடியாதிருந்தாலும் மற்றவர்களின் உரிமைகளை உதாசீனம் செய்து செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்டம் இடமளிக்கிறது.
2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு ஆதர வான தமிழ்நெற்.கொம் இணையத்தளத்தை இலங்கை அரசாங்கம் தணிக்கை செய்யும் உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் ஊடகத்துறை அமைச்சு எடுத்துள்ள இந்த தீர்மானம் நாட்டு மக் களின் தனி நபர் சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்பதற்கு பேருதவி யாக அமைந்துள்ளது.
ஒரு பத்திரிகை அல்லது இலத்திரனியல் ஊடக மொன்று ஒரு தனி நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது அவரது உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் பற்றி போலியான தக வல்களை வெளியிட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் தன்னை அவ மானப்படுத்தி பொதுமக்கள் முன்னிலையில் தலைகுனிய செய்ய வைத்தமைக்காக சம்பந்தப்பட்ட பத்திரிகை அல்லது இலத்திரனியல் ஊடகத்திற்கு எதிராக மானநஷ்ட வழக்கு கோரி இலட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் நஷ்ட ஈட்டை பெறுவதற்கு சட்டம் இடமளிக்கிறது.
போலியான இணையத்தளங்களுக்கு எதிராக ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சு எடுத்துள்ள இந்த தீர்மானம் மக்களின் அடிப் படை உரிமைகளுக்கு அளிக்கும் ஒரு உத்தரவாதமாக அமைந்தி ருக்கிறதென்று நாம் பாராட்ட விரும்புகிறோம்.
No comments:
Post a Comment