Wednesday, November 09, 2011தூத்துக்குடி:தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த 47 பேர் இலங்கைக்கு கப்பலில் புறப்பட்டுச்சென்றனர்.இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு முகாம்களில்தங்கியிருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் சொந்த நாடு திரும்புகின்றனர். நேற்று தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் ஸ்காட்டியோ பிரின்ஸ் மூலம் இலங்கை கிளம்பினர். இதில் திருச்சி மாவட்டம் வாழவந்தான் முகாமில் இருந்து 10 பேர், கரூர் ராயனூர் முகாமில் இருந்து 16 பேர், தூத்துக்குடி தாப்பாத்தியை சேர்ந்த4 பேர், மண்டபம் முகாமில் இருந்து 13 பேர் என தமிழகத்தில் 4 குழந்தைகள் உள்பட மொத்தம் 47 பேர்கிளம்பிச்சென்றனர். கடந்த அக்டோபர் 11ல் 31 பேர் கிளம்பிச்சென்றனர். இவர்கள் இலங்கைக்குசெல்வதற்கானஏற்பாட்டை பன்னாட்டு அகதிகள் மறுவாழ்வு மையத்தினர் செய்திருந்தனர்.1980களில் இலங்கையில் போரினால் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த தங்களுக்கு உணவு, தங்குமிடம், மின்சாரம் என பல அடிப்படை வசதிகளை செய்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
நாடு திரும்பிய ஐந்து மீனவர்கள்!
இந்திய ஒரிஸா மாநில அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஐந்து இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்பினர்.
மிரிஸ்ஸ, பேருவனை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஜூலை மாதம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்தனர்.
சட்ட விரோதமான முறையில் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த மூன்று மாதகாலமாக ஒரிஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment