Wednesday, November 9, 2011

சித்திரவதைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - மொஹான் பீரிஸ்!

Wednesday, November 09, 2011

சித்திரவதைச் சம்பவங்ளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்படக் கூடிய சித்திரவதைச் சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் சட்ட ஆலோசகரும் முன்னாள் சட்ட மா அதிபருமான மொஹான் பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகளின் சித்திவதைகளுக்கு எதிரான குழு அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

சித்திரவதைகளுக்கு எந்தவிதமான நெகிழ்வும் காட்டப்படக் கூடாது என்பதனை இலங்கை அரசாங்கம் 110 வீதம் ஏற்றுக்கொள்ளதாக மொஹான் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் போன்ற பலரை சி;த்திரவதைக்கு உட்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment