அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டதாக பரவியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை: புலி சந்தேகநபர்கள் தங்கியிருக்கும் வாட்டில் இருந்து 19 கையடக்கத் தொலைபேசிகள் அதில் செய்மதி தொலைபேசிகளும் கைப்பற்றியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்!
Monday, November 28, 2011அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் குறித்து சிறைகைதிகள் தாக்கப்பட்டதாக பரவியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்தார்.
எனினும் நேற்று சிறைச்சாலைக்குள் திடீர் சோதனை நடத்திய சிறை அதிகாரிகள் புலி சந்தேகநபர்கள் தங்கியிருக்கும் வாட்டில் இருந்து 19 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளதாகவும் அதில் செய்மதி தொலைபேசிகளும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டமைக்கு சிறைக்கைதிகள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அதன்போது அவர்களுடைய ஆடைகளை கிழித்தும் பொருட்களை வீசியும் கலகத்தில் ஈடுபட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
எனினும் தற்போது எவ்வித பதற்ற நிலையும் இல்லை என தெரிவித்த அவர், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment