Monday, November 28, 2011யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர். சுதந்திரமான முறையில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. ஏ9 வீதி திறக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. மக்கள் வருமானங்களை பெறுகின்றநனர்? நிலைமை இவ்வாறு இருக்க வடக்கு கிழக்கில் இதனைவிட என்னவகையான இயல்பு நிலைமையை கூட்டமைப்பினர் எதிர்பார்க்கின்றனர் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பினார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போர்க்கால சூழ்நிலைகளை மாற்றியமைத்து சாதாரண சூழ்சிலையை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது இராஜாங்க திணைக்களத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயா அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment